வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நாளை வடக்கிற்கு விஜயம் – பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல நாளை (02) வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகைதரவுள்ளார்.
அத்துடன் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பல்வேறு மக்கள் நலன் வேலைத் திட்டங்களை அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் நாளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் 25 ஆவது ஊடகப்பிரிவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதுதொடர்பான நிகழ்வுகளில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன் ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இராஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன் ஆகியோர் தலைமையில் வடக்கை கேந்திரமாகக்கொண்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் தினகரன் பத்திரிக்கை யாழ் பதிப்பை மீண்டும் புதுப்பொழிவுடன் ஆரம்பிக்கும் விழா காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|