வெகுசன ஊடக அமைச்சு தோல்வியடைந்த அமைச்சு – அமைச்சர் அஜித். பி. பெரேரா!

Friday, July 12th, 2019

கடந்த 05 ஆண்டுகளில் அரசாங்கத்தில் உள்ள தோல்வியடைந்த அமைச்சு வெகுசன ஊடக அமைச்சு என்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கு வெகுசன ஊடக அமைச்சு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.