வீரர் ஒருவருக்கு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா : அமைச்சர் தயாசிறி அதிர்ச்சி தகவல்!

Sunday, October 16th, 2016

இலங்கை கிரிகட் வீரர்களுக்கு ஒரு ஓட்டத்திற்கு மாத்திரம் சுமார் 27 ஆயிரம் ரூபாவை இலங்கை கிரிகட் நிறுவனம் வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

“கடந்த காலத்தில் மாத்திரம் இலங்கை கிரிகட் அணியின் வீரர் ஒருவர் 5 கோடிக்கும் அதிகமான பணத்தை கிரிகட் நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளார்.

இதன்படி குறித்த வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அணியின் தலைவருக்கு ஒரு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது.எனினும் அணி தோல்வியடைந்தாலும் குறித்தப் பணம் வீரர்களுக்கே சென்றடைகின்றது. நான் இதனை விமர்சிக்கவில்லை.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மாத்திரமல்ல அனைத்து துறைகளிலும் உள்ளவர்களின் செயற்பாடுகளையும் நாட்டில் உள்ள சகல தரப்பினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதனாலேயே இதனை குறிப்பிடுகின்றேன்.

வீரர்கள் திறமைகளை வெளிபடுத்துமிடத்து அவர்களுக்கு அதிக சன்மானம் பெற்றுக்கொள்வதற்கான முறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையாயின் வீரர்கள் சோர்ந்து விடுவர்.  தோல்வியடைந்த வீரர்களுக்கு இவ்வாறான தொகை கிடைக்கப்பெறுவதை மக்கள் அறிந்துகொண்ட பின்னர் என்ன செய்வார்களோ என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: