வீரகுமார திஸாநாயக்கவை கைது செய்யு உத்தரவு

Monday, September 18th, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வீரகுமா திஸாநாயக்க இன்று முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.