வீதி விபத்துக்களை தடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, March 10th, 2021

வீதி விபத்துக்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த பிரிவானது டிஜிட்டல் முறையின் கீழ் செயற்படுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களால் நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களில் பயணிப்போர் மட்டுமல்லாது, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வீதி விபத்துக்களை தடுப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அதற்கான அனுமதி அமைச்சரவையினால் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், விரைவில் அந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: