வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 70 வீதமானோர் வறியவர்கள் !

இலங்கையில் வீதி விபத்துக்களில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் 70 சதவீதமானோர் குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து சபையின் தலைவர் சிசிர கோதாகொட கருத்து தெரிவிக்கையில் ,குடும்ப வருமானத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர் வீதி விபத்தில் பலியாகும் சந்தர்ப்பத்தில், குடும்பத்தின் பொருளாதாரம் சீர்குலைகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்தக் குடும்பமும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு 38 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்றன. இவற்றில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார் .
Related posts:
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி!
எதிர்வரும் மாதம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு- அமைச்சர் மஹிந்த அமரவீர!
அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் - ஆளு...
|
|