வீதி விபத்துக்களால் 8 பேர் நாளாந்தம் உயிரிழப்பு – தண்டப்பணத்தை அதிகரிக்கக் கோரிக்கை!

Wednesday, March 27th, 2019

வீதி விபத்துக்களில் நாளொன்றுக்கு 8 பேர் வரையிலானோர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டிய போக்குவரத்துப் பிரதி அமைச்சர் அசோக அபே சிங்க இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வாகனப்போக்குவரத்துக் குற்ற்ங்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கவும் மற்றும் வீதிப்போக்கவரத்து சட்டதிட்டங்களை கடுமையாக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும்  தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான வரவு – செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அதன் போது தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளன. வாகன விபத்துக்களினால் நாளொன்றுன்றுக்கு 8 பேர் வரையிலானோர் உயிரிழக்கின்றனர். 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை விடவும் அதிகமான உயிரிழப்புக்கள் வாகன விபத்துக்களின் மூலம் இடம் பெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன்படி போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டும். மது போதையில் வாகனம் செலுத்தல், ரயில் தண்டவாளங்களில் நடப்பது உள்ளிட்ட விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சட்டங்களை கடுமையானதாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  இதன்படி 7 குற்றங்களுக்கான தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என அவர் தெரிவித்தார்.

Related posts: