வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பலி!

Friday, March 4th, 2022

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார்.

கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கல்வியியற் கல்லூரியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெறவிருந்த நிகழ்வுக்காக கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த வேளை , கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி சந்தி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திர போட்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

போதிய வெளிச்சமின்றி உழவு இயந்திர பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தமையால் , குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: