வீதி ஒழுங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, October 4th, 2020

வீதி ஒழுங்கை சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த திட்டத்தினை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் காலங்களில்  நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதிமுதல் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரையும் மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையிலும் தற்போது மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் இந்த வீதி ஒழுங்கு சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியின், பொல்துவ சுற்றுவட்ட வீதி தொடக்கம் ஹோர்ட்டன் பிளேஸ் வரை,

பேஸ்லைன் வீதியில், களணி பாலத்திலிருந்து ஹைலெவல் வீதி சுற்றுவட்டம் வரை, ஹைலெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, பித்தளை சந்தி, ஸ்ரீ சம்புத ஜயந்தி மாவத்த, தும்புளை சந்தி, தேர்தஸ்டன் கல்லூரி, மார்கஸ் பெர்ணான்டோ வீதி, பொது நூலகம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த வரை, காலி வீதியில் வில்லியம் சந்தியில் ஆரம்பித்து, தெஹிவளை, காலி வீதி சுற்றுவட்டம் வரையான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் செய்றபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: