வீதி ஒழுங்குகளை முறையாக முன்னெடுக்க விசேட திட்டம்!

Wednesday, July 17th, 2019

வீதி ஒழுங்கு விதிகளை முறையாக முன்னெடுப்பதன் மூலம் வாகன நெரிசலைக் குறைத்து ஒழுக்கம் மிக்க சாரதிகளை உருவாக்கும் நோக்கத்துடனே பொலிஸ் தலைமையகம் விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இது தொடர்பாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான முக்கிய அதிகாரிகளிடம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் வீதி நிரல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பான திட்டங்கள் மூலம் முன்னேற்றகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடும் ஓசைகளை எழுப்பும் மற்றும் அதிக அளவில் புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பிலும் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக வாகனங்கள் தொடர்பான நடவடிக்கைளுக்கு மேலதிமாக கொழும்பு நகரத்தில் வாகன பொலிஸ் பிரிவு 24 மணித்தியாலமும் 17 குழுக்களை கொழும்பு நகரத்தில் கடமையில் ஈடுபடுத்தி முற்றுகைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நடவடிக்கை பிரதான வீதிகளுக்கு வரையறுக்கப்படாமல் குறுக்கு வீதிகளிலும் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு நகர வாகன பொலிஸ் பிரிவின் பணிப்பாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ஜயசிறி கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Related posts: