வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் வலியுறுத்து!

Tuesday, September 21st, 2021

வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் , பாதுகாப்பு விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை உடனடியாக நிறுவுமாறு துறைசார் தரப்பினருக்கு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்காக உரிய ஊழியர்களை ஈடுபடுத்துமாறும் வேகத்தை கட்டுப்படுத்த தற்காலிக வீதித் தடைகளை அமைக்குமாறும் அமைச்சர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

வீதி அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்ககாக தான் கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆபத்தான இடங்கள் தொடர்பாக சரியான எச்சரிக்கை சமிக்ஞைகள் சில இடங்களில் முறையாக நிறுவப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு வேகத்தடைகள் கூட அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார் . வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் வீதி சமிக்ஞைகளை ஒரு வாரத்திற்குள் உடனடியாக அமைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பாரிய அபிவிருத்திகளை போன்றே பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டும் என்றும் அதனால் சகல பொறியியலாளர்கள், சகல வீதி அபிவிருத்தியுடன் தொடர்புள்ள தரப்பினர் மற்றும் ஒப்பந்தக்காரர்களை இது தொடர்பில் அறிவூட்டுமாறும் அமைச்சர் துறைசார் தரப்பினருக்கு அறிவுறுதிதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: