வீதி அனுமதிப்பத்திரம் இன்றி 100 தனியார் பஸ்கள் சேவையில் – இலங்கை போக்குவரத்து சபை!

சுமார் 100 தனியார் பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் பயணிக்கும் பஸ்களில் சுமார் 30 பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடுவதாக சபையின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி மார்க்கத்தில் அமைந்துள்ள சில பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், சாரதிகள் வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணிப்பமதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி அனுமதிபத்திரமின்றி இயங்கும் பஸ்களை சுற்றிவளைப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசியல் காரணங்களால் அதிபர் நியமனம் தாமதம் - வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவிப்பு!
இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை - வளிமணடலவியல் திணைக்களம்!
4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!
|
|