வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வடமராட்சியில் ஒருவர் உயிரிழப்பு!
Sunday, February 11th, 2024யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் கச்சாய்- புலோலி வீதியில் மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை குறித்த விபத்து இடம்பெற்றது.
வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
காலையில் அதிக பனி மூட்டம் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியாததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா விமரிசை!
தீக்காயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண் பலி !
20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை - பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!
|
|