வீதியின்  புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 16th, 2016

மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து வட்டுக்கோட்டை தெற்கு, கார்த்திகேய வித்தியாலய வீதியின் புனரமைப்பு பணிகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா  நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

குறித்த பகுதிக்கு இன்றையதினம்(16) மோட்டார் சைக்கிளில் சென்ற டக்ளஸ் தேவானந்தா மக்களுடன் கலந்துரையாடி புனரமைப்பு பணிகள் குறித்தான மக்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்துகொண்டார்.

3

இதனடிப்படையில் வீதியின் இரு மருங்கிலும் உள்ள வீடுகளின் பிரதான வாயில்கள் சிலவற்றுக்கு கிறவல் இட்டு நிரப்பப்பட்டு ஒழுங்கான முறையில் செப்பனிடப்பட்டுள்ளதாகவும் பலவற்றிற்கு இவ்வாறு கிறவல் இடப்படாது உள்ளதனால்  தாம் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2

அத்துடன் வீதியின் இருமருங்குகளும் முழுமையாக பூரணப்படுத்தப்படாத நிலையில் மழைகாலங்களில் வெள்ளம் வழிந்தோடும் போது வீதியையும் அடித்துச் செல்லக்கூடிய அவலமும் ஏற்படவுள்ளதாகவும் இதனை கருத்தில் எடுக்காது இவ் வீதி புனரமைப்பு செய்யப்பட்டள்ளமையானது தம்மை ஏமாற்றும் நடவடிக்கை என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1

இதனிடையே கோரிக்கை தொடர்பில் நேரில் வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன் மூளாய் மூங்கோடை கிராமத்தின் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள  வீதியையும் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), பிரதி மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.

5

Related posts: