வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர்!

Sunday, March 21st, 2021

பேருந்து, டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது பற்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை, வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். மதுபோதையில் மற்றும் கவனயீனமான முறையில வாகனத்தைச் செலுத்துபவர்கள் சம்பந்தமாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related posts: