வீதிகளில் பயணிக்கும் போதே சாரதிகளிடம் மருத்துவ பரிசோதனை!

Wednesday, July 25th, 2018

வீதியில் பயணிக்கின்ற போதே சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் அனுமதிப்பத்திரத்தை பெறுகின்றபோது நோய்களுக்கு உட்படாத நிலையில் பின்னர் பிற்பட்ட காலங்களில் அவர்கள் நோய்வாய்ப்படுவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு.!
கடலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை - பருத்தித்துறையில் சம்பவம்!  
இலங்கை வரும் மலேசிய பிரதமர்!
15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல் - ஆட்பதிவுத்திணைக்களம்!
உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!