வீதிகளில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !
Sunday, May 17th, 2020கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் நோக்கில் வீதிகளில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இவ்வாறு கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது கொரோனாவை ஒழிப்பதற்கு மாறாக சுகாதார பாதிப்புக்களையே உருவாக்கும் எனசுட்டிக்காட்டியுள்ளதுடன் வீதிகள், சந்தைகள் போன்ற பொது இடங்களில், வீதிகளில் கிருமித் தொற்று நீக்கியை தெளிப்பது கொரோனா வைரஸை அழிப்பதற்கான சாத்தியங்கள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
வீதிகளில் கொரோனா வைரஸ்களை அழிப்பதற்காக அதிகளவில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிக்க நேரிடும் எனவும் அது மனித உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்கள் தரைப் பகுதி, நிலம் உள்ளிட்ட பல்வேறு பரப்புக்களில் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குறித்து ஊகங்கள் வெளியிடப்பட்ட போதிலும் திடமான விஞ்ஞானபூர்வ ஆய்வு முடிவுகளின் மூலமே இதனை உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|