வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகளை அகற்றுமாறு கோரிக்கை!

Saturday, June 4th, 2016

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் NELSIP- DFAT திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதிகளின் புனரமைப்பிற்கு  இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகள் ஆகியவற்றை அகற்றியுதவுமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் திருமதி- தி.அன்னலிங்கம் கேட்டுள்ளார்.

குறிப்பாக நந்தாவில் வடக்கு வீதியும், குறுக்கு- இணைப்பு வீதிகளும் மற்றும் பாரதி- விவேகானந்தா வீதிகளில் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், எல்லை வீதிகள் ஆகியவற்றை அகற்றிச் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.

Related posts: