வீணைக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மாறுங்கள் – அல்வாயில் ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஷ்!

Thursday, July 23rd, 2020

கடந்த காலங்களில் நீங்கள் அதிகப்படியான ஆணையினை வழங்கி அதிகாரத்தில் அமர்த்திய ஆளுமை அற்ற அரசியல் தலைமையின் செயற்த்திறன் அற்ற செயற்பாடுகளால், கடந்த ஐந்து வருடங்களாக எமது மக்கள் எவ்வித பயன்களையும் பெறாது வீண்அடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, எதிர்காலத்தில் குறைந்தது  ஐந்து வருடங்களுக்காவது கோத்தபயா ராஐபக்‌ஷ ஐனாதிபதி மற்றும் பிரதமர் மகிந்த ராஐபக்சஷ தலைமையில் தான் புதிய அமைச்சரவை மலரவிருக்கின்றது.

அதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஈ.பி.டி.பி. கட்சி கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் என்பதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

எனவே, நடைபெறவுள்ள தேர்தலில் வீணைக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மாறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்தி உங்கள் வாழ்வை வளமனதாக்கி பயன்பெறுங்கள் என்று அல்வாய் இளங்கோ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts: