வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க விஷேட பொறிமுறை – முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது அதிகாரிகளின் விசேட பொறுப்பு என எனஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, November 27th, 2020

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி, குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், கிராம அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு பணிகள் அலுவலர்கள் குழுவொன்றுக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டு தனிமைப்படுத்தல் தொடர்பான கண்காணிப்பு பொறிமுறை கூட்டமைப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களினால் அமைச்சுக்ககள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், மாகாண சுகாதார செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தல் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசேட பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: