வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானம்!
Wednesday, January 17th, 2024இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் இருந்து வீட்டு பணியாளர் ஒருவரை ஆட்சேர்ப்பு செய்யும் போது அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரம் சவுதி அரேபிய ரியாலில் இருந்து 13 ஆயிரம் சவுதி அரேபிய ரியாலாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் – பொலிசாரின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்...
பிணைமுறி ஒப்பந்தத்தில் ஈடுபட்ட அனைவரும் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்திச் செல்கின்றனர...
குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும...
|
|