வீட்டுத்திட்ட பயனாளர் தெரிவில் முறையான பொறிமுறை வேண்டும் – வலி. வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, April 18th, 2019

வீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில் முறையான பொறிமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால் வறிய அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரச அதிகாரிகளின் விருப்ப வெறுப்புகளின் படி இல்லாது குறிப்பாக வீடுகளே இல்லாத வறிய மக்களுக்கு திட்டத்தில் முதன்மை வழங்கி அவர்களது வாழ்வியல் நிலையை மேம்படுத்த உறுதியான பொறிமுறை வகுக்கப்பட்டு திட்டங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவேண்டும் என்றும்  என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் இணைத்தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகள் தெர்டர்பில் ஆராயப்பட்டபோது வீட்டுத்திட்ட பயனாளிகள் மணல் கொள்வனவு செய்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள்  தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வலி வடக்கு பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்காக இவ்வாண்டு 500 க்கும் அதிகமான வீட்டத் திட்ட வழங்கலை இப்பிரதேசம் செயலகம் நடைமுறைப்படுத்தவுள்ள நிலையில் அதற்கான மணல் விநியோகத்தை அல்லது மணலை பெற்றுக் கொடுப்பதற்கான சூழ்நிலையை இதுவரை பிரதேச செயலகம் மேற்கொள்ளாதிருப்பதால் பயனாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்

கடந்தகாலத்தில் மகேஸ்வரி நிதியத்தினூடாக மணல் வழங்கப்பட்டபோது 18 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட மணல் தற்போது 60 ஆயிரத்ததையும் தாண்டியுள்ளதால் வீட்டத் திட்டத்திற்காக வழங்கப்படும் நிதியில் கணிசமான அளவு நிதியை மணலுக்காகச் பயனாளிகள் செலவிடும் நிலை காணப்படுகின்றது. இதனால் பயனாளிகள் திட்டத்தை முழுமை செய்யமுடியாது தவிப்பதுடன் கடனாளிகளாகவும் மாற்றப்படுகின்றனர். அந்தவகையில் மணல் வழங்கலுக்கான நிரந்தர தீர்வை விரையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதனால் பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழில்துறையை இழக்க நேரிடும் என்பதுடன் வடக்கில் பெரும் தொழிற்சாலை ஒன்றையும் இழக்க நேரிடும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகள் தெர்டர்பில் ஆராயப்பட்டபோது காங்கேசன்துறை சிமெந்து ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கருத்த தெரிவிக்கையிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இவ்வாறு சுட்டிக்காட்டினர்.

மேலும் குறித்த தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, இவ்வாறு குறித்த ஆலையை மூடுவதனால் இங்கு வாழும் மக்கள் தமக்குரிய தொழில்வாய்ப்புக்ளை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாது வடபகுதியின் மிகப்பெரும் தொழிற்சாலை ஒன்றும் இழக்கப்படும் நிலை உருவாகும்.

அத்துடன் சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்பகுதியில் மூலப்பொருட்களை இப்பகுதியில் அகழ முடியாத நிலை உருவானால் வேறு இடங்களிலிரந்து அதற்கான மூலப்பொருட்களை இங்கு கொண்டுவந்து இவ் ஆலையை முடிவுப் பொருள் உற்பத்தியை செய்யும் தொழிற்சாலையாக தொடர்ந்தும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

மேலும் வலி.வடக்கு பகுதி நிலவிடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறையற்றிருக்கும் நிலையில் அதுகுறித்து போராட்டங்களை முன்னெடுக்க சந்தர்ப்பங்களை தருமாறு வலி.வடக்கு தவிசாளரிடம் பலதடவைகள் கோரியிருந்த நிலையிலும் அவர் அதற்கான ஆதரவை தருவதில்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: