வீட்டுத்திட்ட தெரிவில் திருப்தியில்லை:தகுதியானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபையின் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஜெகதாஸ்!

Monday, December 10th, 2018

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் திருப்தியில்லை என சாவகச்சேரி பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வை.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

தென்மராட்சியில் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் வசதி படைத்தவர்கள் மற்றும் வீடு உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் வன்னி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பயனாளிகள் தெரிவு மீளாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மக்களின் வலிகளை தெரியாதவர்கள் தமிழர் அரசியல் தலைமையாக உருவாக்கப்படுவதே அடாவடித்தன அரசியல் வளரக் காரண...
பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அமரர் அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி...
திட்டமிட்டபடி யாழ் - கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் - வெளியானது நேர அட்டவணை!