வீட்டுத்திட்ட அமையவிருக்கும் காணியில் பயனாளி குடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!
Monday, March 29th, 2021வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போது அது தொடர்பிலான முன்மொழிவுகளில் சரியான பயனாளிகளையே உள்வாங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் இராமநாதன் வீட்டுத்திட்ட அமையவிருக்கும் காணியில் பயனாளி குடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் வழங்கப்படும் வீட்டு திட்ட தெரிவுகளில் குறைபாடுகளும் மோசடிகளும் உள்ளதாக வெளிவரும் செய்திகள் தெடர்பில் கருத்த தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
தற்போதைய நிலையில் காணினுள் தற்காலிக குடிசை ஒன்றை அமைப்பதற்கு ஒன்றரை இலட்சம் தொடக்கம் இரண்டு இலட்சம் ரூபாய் வரை நிதி தேவைப்படுகின்றது. அத்துடன் காணியில் மலசலகூடம் மற்றும் நீர் வசதி இருக்கவேண்டியதும் அவசியம்.
இந்த வசதிகள் இருந்தால் ஏன் மக்கள் இலவச வீட்டுத்திட்டத்தை எதிர்பார்த்திருக்கப் போகின்றார்கள் என்றும் இதனை வற்புறுத்தும் உத்தியோகத்தர்களால் அடிப்படை வசதியின்றி வாசிக்க முடியுமா என்றும் ஐங்கரன் இராமநாமதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன் இவ்வாறு நிபந்தனைகள் விதிப்பதனால் உண்மையில் கிடைக்க வேண்டியவர்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்காமல் போலவதுடன் மேலதிகமாக வீட்டுத்திட்டத்திற்கு முயற்சி எடுப்பவர்களுக்கே அந்த பலன் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிண் இணைத் தலைவரின் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் வீடுவீடாகச் சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். அதுமட்டுமன்றி வீட்டுதிட்டத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால். பயனாளிகள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதித் தருமாறு நிர்பந்திக்கிறார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் தெரிவித்து வருகின்றனர்.
அதைவிட திருத்த வீட்டுத்திட்டத்திற்கு கூட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்மொழியப்பட்ட பயனாளிகள் பட்டியலை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரின் பிரதிநிதிகள் என கூறுபவர்கள் வீடுவீடாக கொண்டுசென்று கோரிக்கைக் கடிதம் தருமாறு கோரும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் பயனாபளிகளை அச்சுறுத்தும் அல்லது அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் அல்லது முறைதவறி வழங்கப்படும் வீடுகள் தொடர்பான விபரங்களை நாம் தற்போது எமது பிரதேசத்தில் திரட்டி வருவதுடன், ஏழைகளுக்கு வழங்கும் இந்த இலவச விட்டு திட்டத்தில் பயனாளி தெரிவு முற்றுமுழுதாக கிராம மட்ட உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்றதாக தற்போது தெரிவிக்கப்படும் நிலையில் இதில் காணப்படும் அனைத்து குறைபாடுகள் மோசடிகளுக்குமான பொறுப்பை அந்த அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த ஐங்கரன் இராமநாதன் சரியான தேவையுடைய வீட்டுத்திட்ட பயனாளிகளே தெரிவாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|