வீட்டில் இருந்து பணி புரிவதற்கான சுற்றறிக்கை – அரசாங்கம்!

நாளைமுதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளைமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணி புரியும் வாரமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை தொடர்பில் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Related posts:
இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது!
உறவினர் வீடுகளுக்கும் அயல் வீடுகளுக்கும் செல்வதையும் தவிருங்கள் - இராணுவ தளபதி வலியுறுத்து!
15 - 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி - ஒரு டோஸ் மாத்திரமே வழங்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட...
|
|