வீடுகளை துப்பரவு செய்வதில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்!

இயற்கை அனர்த்தத்தினாவ் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை துப்பரவு செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் அடங்கிய 50 ஆயிரம் பொதிகளை உடனடியாக வழங்க சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் முன்வந்துள்ளது.
அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்காவின் பணிப்புரைக்கு அமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹப்புஹின்னவின் கண்காணிப்பின் கீழ் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சந்தையில் ஆயிரத்து 250 ரூபா பெறுமதியான பொருட்கள் இந்தப் பொதியில் உள்ளடங்குவதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தத் தொகுதியில் பகிர்ந்தளிப்பதற்காக இந்த 50 ஆயிரம் பொதிகளும் நேற்று எடுத்துச் செல்லப்பட்டன. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அகலவத்த பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கும் குழுவின் தலைவராக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|