வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதடன் அதற்கு விண்ணப்பிக்குமாறு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப்படிவங்களைத் தத்தமது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்வரும் ஜனவரி – 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் பயனாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. விண்ணப்பங்கள் தமது கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின் பிரதேச செயலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவறுத்தியுள்ளது.
விண்ணப்பத்தின் ஒரு பிரதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்புமாறும் பயனாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேற்படி வீடுகள் இரண்டு அறைகள், சமையலறை, கழிவறை மற்றும் மேலதிகமாக இரு அறைகளுடன் 550 சதுர அடி பரப்பளவைக்கொண்டதாக அமைந்துள்ளளன.
சூரிய சக்தி மின்சாரம், குழாய்க்கிணறு உட்பட சமையல் அடுப்பு, சமையலறை அலுமாரிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|