வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைக்கப்படவுள்ள துரையப்பா விளையாட்டு அரங்கு!

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டரங்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும்18-ஆம் திகதி நேரடிகாணொளி ஊடாக (வீடியோ கான்பரன்ஸ் திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது துரையப்பா விளையாட்டரங்கம் இந்த விளையாட்டரங்கத்தை புனரமைக்க இந்தியா நிதி உதவி செய்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இவ்விளையாட்டரங்கம் புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர இருக்கிறது
இந்த விளையாட்டரங்கத் திறப்பு விழா எதிர்வரும் 18ஆம்திகதி நடைபெற உள்ளது
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கிறார். இதன்போது பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தே நேரடி காணொளி தொடர்பாடல் முறை மூலமாக ( வீடியோ கான்பரன்ஸ் )பங்கேற்கிறார். பிரதமர் மோடியும் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து விளையாட்டரங்கத்தைத் திறந்து வைத்து உரையாற்ற உள்ளனர்
இதேவேளை துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைத்த பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் நடத்தப்படவுள்ள தேசிய விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனர் . எதிர்வரும் செப்டெம்பர் மாதம் துரையப்பா விளையாட்டரங்கில் தேசிய விளையாட்டு விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
Related posts:
|
|