வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இரு அதிகரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

Friday, September 25th, 2020

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் சொத்துகள் பிரிவு முகாமையாளர் மற்றும் கொழும்பு மாவட்ட முகாமையாளர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகார சபையின் கணக்கீட்டு பிரிவின் விசாரணை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமையவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாரஹேன்பிட்டியிலுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, குறித்த அலுவலகத்தினால் உரிய வகையில் சேவைகள் வழங்கப்படுவதில்லை என ஜனாதிபதியிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அந்த அதிகார சபையின் கணக்கீட்டு பிரிவின் விசாரணை குழு குறித்த இரண்டு பேரையும் இடமாற்ற பரிந்துரைத்துள்ள நிலையிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: