விஷ ஜந்துக்களின் தாக்குதல் அதிகரிப்பு – அச்சத்தில் தென்மராட்சி மக்கள்!

397512-900x585 Wednesday, May 16th, 2018

தற்போது நிலவிவரும் கடும் வெப்பமான காலநிலையால் விஷ யந்துக்களின் தாக்கங்களிற்கு இலக்காகி அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சி பகுதியில் பாம்பு, தேள், குளவி மற்றும் இனந்தெரியாத விஷ யந்துக்களின் கடிக்கு இலக்கான பலர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

கடந்த இரு தினங்களில் கல்வயல் சாவகச்சேரியைச் சேர்ந்த 39 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தேளின் கடிக்கு இலக்கான நிலையிலும் நாவற்குழியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 37 வயதான நபர் ஒருவரும் இனந்தெரியாத விஷ யந்துக்களின் தாக்கத்திற்கு இலக்கான நிலையிலும் வரணியைச் சேர்ந்த 33 வயதான குடும்பப்பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரும் விடத்தற்பளையைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரும் குளவிக்கடிக்கு இலக்கான நிலையிலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு இம்மாதம் மாத்திரம் 25 இற்கு மேற்பட்டோர் தென்மராட்சிப் பகுதியில் விஷ யந்துக்களின் கடிக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் பாம்புக் கடிக்கு இலக்கானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் கடும் வெப்பநிலை நிலவுவதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட்  பொதிகளுடன் ஒருவர் கைது!
சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தை விரிவுபடுத்த உலகவங்கி கடனுதவி!
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா?
துயரம் நிறைந்த வாழ்விலிருந்த மக்களுக்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் - வேலணை பிரதேச சபை தவிசாள...
பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ...