விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் – பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Wednesday, February 24th, 2021

விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே குறிக்கோள் என்று இலங்கை  – பாகிஸ்தான் அரச தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் பிரதமரை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமரும் இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு இரு நாடுகளினதும் அரச தலைவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்திப்பின்போது இரு நாடுகளிலும் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானின் விவசாய பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்துடன் மிகவும் ஒத்திருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதி துறையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரும் கவனம் செலுத்தினர். அத்துன் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் உட்பட பல துறைகள் குறித்து தலைவர்கள் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிரதமர் மஹிந்தவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை - பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும்...
நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!