விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Thursday, October 28th, 2021

உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் 141 கலாநிதிகளும் பேராசிரியர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள விவசாய துறைசார் நெருக்கடிகளுக்கான தீர்வு, தற்போதைய அரசாங்கத்தினால் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படும் பசுமை விவசாய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய செயற்றிட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சில யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு தாம் ஆவலாக உள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் கடிதத்தை சமர்ப்பித்ததன் பின்னர் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: