விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்க அதிரடி நடவடிக்கை – அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ஒதுக்குவதற்கும் விவசாய அமைச்சு தீர்மானம்!

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியிலேயே குறித்த தொகை ஒதுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய, விவசாய நடவடிக்கைகளுக்காக ஆயிரம் இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த வருடம் நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பல்கலை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து!
தலையில் இரும்புக் கம்பியால் பலமாக குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் யாழ். போதனாவில் அனுமதி...
திருமணம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|
|