விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கான அனைத்து வரிகளும் நீக்கப்படும் – ஜனாதிபதி!

Saturday, October 7th, 2017

நாட்டில் பயன்படுத்தப்படும் விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான சுங்க வரி நீக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்’ என்ற நிகழ்வு கெக்கிராவ திப்பட்டுவவ நீர்த்தேக்கத்துக்கு அருகில் நேற்று(06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நன்மை கருதி தேசிய உணவு உற்பத்தி வாரத்தில் தொழில் நுட்ப உபகரணங்களுக்கான வரி நீக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்கள் இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: