விவசாய திணைக்களத்தால் விவசாயிகளுக்கு ஆலோசனை!

உரிய காலத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அறுவடை செய்வதன் மூலம் பூச்சி வகைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பினை தடுக்க முடியும் என விவசாய திணைக்களம், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், படைப்புழு ஒழிப்பு பிரிவின் பிரதானி அனுர விஜேதுங்கவினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் அறுவடை மேற்கொண்ட விவசாயிகளின் பயிர்களுக்கு படைப்புழுவின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் படைப்புழுக்கள் பரவுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது.
இயற்கையான பராமரிப்பு மற்றும் முறையான முகாமைத்துவம் இல்லாதமை காரணமாக படைப்புழுக்களினால் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புக்கள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நிவர்த்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை கோரும்பட்சத்தில், உதவுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|