விவசாய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க படைத்தரப்பினர் தயார் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பின்போது தமது தேவைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தோடு கவனிக்கப்படாத அரச நிலங்களை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில் விவசாய திட்டங்களுக்கு இராணுவ ஒத்துழைப்பை வழங்குவதாக சவேந்திர சில்வா உறுதியளித்துள்ளார்.

அத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டுவர கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ தளபதிகளை ஒவ்வொரு மாதமும் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பிரதிநிதிகளிடம் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

000

Related posts: