விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

Sunday, February 28th, 2021

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய விவசாய ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கும் தேசிய செயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கஸபகல ரஜமஹா விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் விவசாய கிராமம் அல்லது வலயம் நிறுவும் திட்டத்துக்கு அமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விவசாய கிராமம்,வலயம் ஆரம்பித்து வைக்கும் வகையில் பிரதமர் மாங்கன்று ஒன்றினை நாட்டிவைத்தார்.

குறித்த நிகழ்வு நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts: