விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, May 1st, 2020

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன என்ற அறுவடையின் பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200 விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை விவசாய மேம்பாடு கருதி முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்ரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இம்முறை ஐந்து இலட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: