விவசாய அறுவடைகளை களஞ்சியப்படுத்த புதிய களஞ்சியசாலை!

Saturday, March 3rd, 2018

வரட்சி வலயங்களில் விவசாயிகளின் அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக களஞ்சியசாலை வசதிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கிளிநொச்சி, பொலநறுவை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள களஞ்சியசாலைகளின் நிர்மாண பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும் எனஎதிர்பார்க்கபபடுகின்றது.

இந்த களஞ்சிய கட்டடத்தொகுதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவத்திற்காக ஒப்பந்த உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான அதிகாரம்மாவட்ட செயலாளருக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள செயலாளர்களுக்கு குறித்த பணிகளை ஒழுங்குறுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts: