விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடம் முக்கிய தீர்மானம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Monday, December 12th, 2022விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மில்கோ நிறுவனத்தையும், கால்நடை அபிவிருத்தி சபையினை ஒரே நிறுவனமாக செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், உர விநியோகத்தை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களான லங்கா உர நிறுவனம் மற்றும், கொமர்ஸல் உர நிறுவனம் என்பன ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாயம் மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் அனுராதபுரம் அறுவடை தொழில்நுட்ப நிறுவனம் ஆகியனவற்றை ஒரே நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்டகது.
Related posts:
நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டால் 4000 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!
இலங்கை - மியன்மார் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி தெ...
|
|