விவசாயிகள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் – இல்லையேல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரிசியை இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Saturday, September 18th, 2021

விவசாயிகள் தொடர்ந்தும் தமது நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்து வந்தால் எதிர்கொள்ள நேரும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தாம் தனிப்பட்ட ரீதியில் அவ்வாறான தீர்மானத்தை விரும்பவில்லை என்பதையுமு; தெரிவித்துள்ள அமைச்சர், விவசாயிகள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  மேலும் கூறுகையில் –

விவசாயிகளின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் எதிர்கொள்ள நேரும் நிலைமையினை நிவர்த்தி செய்வதற்கு மேற்படி தீர்மானத்தை எடுக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உத்தரவாத விலை போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் உர மானியத்தையும் வழங்கி நெல்லுக்கு மேலதிகமாக 31 ரூபாயையும் வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: