விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் விவசாய உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் – பிரதமர் தெரிவிப்பு!

உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்திற்க்கொண்டு, விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளதுடன், UNDP இந்த முயற்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய உணவு நிலைமை தொடர்பாக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விம்லேந்திர ஷரன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதி இலங்கை பிரதிநிதி மலின் ஹெர்விக் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
விவசாயத்துறை தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சாத்தியமான உணவுப் பற்றாக்குறையை நிலைநாட்டி அதனை சமாளிக்கும் முயற்சியில் கவனம் செலுத்துவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உரத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க விவசாய சமூகத்திற்கு உதவும் புதுமையான விவசாய உதவித் திட்டத்தைத் தொகுத்து வருவதாக UNDP தெரிவித்துள்ளது.
நகர்ப்புற விவசாயத் திட்டத்தில் நாட்டிற்கு உதவ நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளனர் என்றும் FAO விளக்கமளித்தது.
இலங்கையில் அமுல்படுத்தப்படக்கூடிய உணவு நெருக்கடி பதில் திட்டத்தை தாங்கள் தயாரித்து வருவதாக FAO தெரிவித்துள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டால், 5-6 மாதங்களுக்குள் தற்போதைய விவசாய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|