விவசாயிகளுக்கு 500 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு வழங்கத் தீர்மானம்!

Tuesday, April 2nd, 2019

யாழ் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இம்முறை 500 மெற்றிக் தொன் விதை ஊருளைக்கிழங்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அவர்களுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன.

கடந்த வருடம் சுமார் 220 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

50 கிலோ கிராம் கொண்ட விதை உருளைக்கிழங்குப் பெட்டிகள் 3 தொடக்கம் 5 வரை வழங்கப்பட்டன. ஆனால் இதை விட அதிகமான எண்ணிக்கையில்தான் பயனாளிகள் விதை உருளைக்கிழங்கினைக் கேட்கிறார்கள்.

ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டு இம்முறை 500 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நவம்பர் மாதமளவில் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: