விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக தலா 30,000 ரூபா – குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் உதவி – விவசாய அமைச்சு தீர்மானம்!

Friday, March 24th, 2023

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு சிறுபோகத்திற்காக தலா 30,000 ரூபாய் நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்புக்கான அமெரிக்க முகவரகத்தின் உதவி திட்டத்தின் கீழ் இந்த நிவாரண நிதி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 06 மாவட்டங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 48,000 விவசாய குடும்பங்களுக்கு இரண்டு தவணைகளில் தலா 15,000 ரூபாய் வழங்கடவுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களை கொண்ட நெற்செய்கையாளர்கள் இந்த திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: