விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவிப்பு!

Tuesday, January 25th, 2022

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து 10 இலட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாதகமான விளைச்சலைப் பெறாத விவசாயிகளுக்கு மாத்திரமே நஷ்டத்திற்கான வழங்கப்படும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான நிலையான விலையினை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி 2020-2021 பெரும்போகத்தில் விளைச்சல் குறைந்து பாதிப்புகளை எதிர்நோக்கும் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்க 1 கிலோ நெல்லுக்கு ரூ. 25 வீதம் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இன்றுமுதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே கடந்த பெரும்போக நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட அறுவடை இழப்புக்காகவே நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை பெரும்போக உற்பத்தி இடம்பெற்றதாக தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ,இக் காலப்பகுதியில் மரக்கறி உள்ளிட்ட ஏனைய உற்பத்தி அறுவடை சரிவுக்காக  இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 25 நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் பசுமை உற்பத்தி திட்டத்தின் கீழ் மரக்கறி உற்பத்தியில் ஈடுபட்ட உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட அறுவடை இழப்புக்கு நட்டஈடு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்த அவர் .குறிப்பிட்ட காலப்பகுதியில் மரக்கறி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டபோது தேவையான உரவகை சந்தையில் இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால் இந்த உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. விவசாயிகளுக்கு அறுவடையில் 25 தொடக்கம் 50 வீத குறைவு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.                        

Related posts: