விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக விசேட திட்டம் – அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா !

Saturday, February 11th, 2017

பாரிய நீர்பாசன திட்டங்களுக்குட்பட்ட விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக விசேட வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் அறுவடைகளுக்கு நேரடி மற்றும் நிலையான வர்த்தக சந்தை ஒன்று ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இது 54 பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையுடன் இணைந்து தேசிய மட்டத்திலான ஒன்றிணைந்த நடவடிக்கை இது தொடர்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்த அமைச்சர் இதற்கமைவாக விசாயிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு இடையில் தேசிய அமைப்பொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அமைப்பு இம்மாதத்திற்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத்துறை முகாமைத்துவ பணிப்பாளர் சந்திரிகா வி எத்துகல இது தொடர்பாக தகவல் தருகையில் புதிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஊடாக புதிய விவசாய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக சந்தை தொடர்பான தகவல்கள் விவசாயிகள் மத்தில் முன்னெடுக்கப்படும் என்றார். தேசிய இணைப்பு அமைப்பு 200 விவசாய தலைவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை சேர்ந்த 200 பேரையும் கொண்டதாக அமையவுள்ளது.

Vijith-Vijayamuni-Soysa-415x260

Related posts: