இதுவரை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை – ஜனாதிபதி

Sunday, August 6th, 2017

விவசாய நாடு என்றபோதும் விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால் நாட்டின் விவசாய சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மதவாச்சியில் ‘பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க’ புதிய பொருளாதார மத்திய நிலையத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி   இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை, குறைந்தவருமானம், நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமை போன்ற விடயங்களினால் நாட்டின் விவசாய சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகளது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் விவசாயத்துறைக்குத் தேவையான பல்வேறு வசதிகளை வழங்கவும் தற்போதைய அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் புதிய தலைமுறை விவசாயத்துறையில் முன்னேறுவதற்குத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்குத் தேவையாக இருப்பது சுய சக்தியில் கட்டியெழுப்பப்பட்ட வாழ்க்கைமுறையும் பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட திட்டங்களுமாகும் அவர் கூறியுள்ளார்.

Related posts: