விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு நிர்ணய விலை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!.
Friday, February 9th, 2024பெரும்போக நெற்செய்கையின் போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு விலை நிர்ணயம் செய்துள்ளது.
இதன்படி, 14 சதவீதம் வெப்பத்தன்மையை கொண்ட ஒரு கிலோகிராம் நாடு அரிசியை 105 ரூபாயிற்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 120 ரூபாயிற்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கீரி சம்பாவை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன், வெப்பத்தன்மை 14 சதவீதத்தை விட அதிகமாக காணப்படும் ஒரு கிலோகிராம் நாடு அரிசியை 90 ரூபாயிற்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 100 ரூபாயிற்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை 120 ரூபாயிற்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறு, மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாயும், அரிசி சேகரிப்பாளர்களுக்கு 25 மில்லியன் ரூபாயும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|