விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

ஒரு கிலோகிராம் நாட்டு நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 55 ரூபாவுக்கு நாளைமுதல் கொள்வனவு செய்யுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு கிலோகிராம் நாடு நெல் 50 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.குடாநாட்டிலுள்ள பொலிஸார் அனைவரதும் விடுப்புக்கள் திடீர் நிறுத்தம்!
விவசாயிகளின் நலன் கருதி உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!
கொரோனாவின் இரண்டாம் தாக்கம் இலங்கையில் ஏற்படாது – அசுகாதார அமைச்சர்!
|
|