விவசாயத் திணைக்களத்தில் ஆளணி வெற்றிடங்களால்பணிகளை முன்னகர்த்த முடியாத நிலைமை

Wednesday, April 19th, 2017

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்துக்குப் போதிய ஆளணி இன்மையால் பணிகளை முன்னகர்த்துவதில் பெரும் சவால்கள எதிர்நோக்க வேண்டியுள்ளதாக திணைக்களம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் இலங்கை விவசாயச் சேவை பதவிக்கு 22பேர் தேவை. 5 பேர் மட்டுமே இப்போது பணியாற்றுகின்றனர் விவசாயப் போதனாசிரியர்கள் 161 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு 140 பேர் தேவை. 29 பேர் மட்டுமெ கடமையாற்றுகின்றனர். அதிகளவில் வெற்றிடங்கள் இருப்பதால் பணிகளை உரிய காலத்தில் செய்து முடிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது சம்பந்தப்பட்டவர்கள் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்ரகை எடுக்க வேண்டும் என்று விவசாயத் திணைக்களத் தகவல்கள் குறிப்பிட்டன


சீனாவிடம் உதவிபெற பெற இலங்கை தீர்மானம்!
100 சீன தொழிற்சாலைகளை ஹம்பாந்தோட்டையில் நிறுவுவதற்கு வாய்ப்பு!
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் -  பிரபல சட்டத்தரணி முடியப...
இலாபம் ஈட்டும் நிறுவனமாக இலங்கை போக்குவரத்துச் சபை உருவாகியுள்ளது - பிரதி போக்குவரத்து அமைச்சர்!
முதலீடுகளை அதிகரிக்க இந்தியா துணைநிற்கும் : பிரதமர்!